அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணியை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

by Staff Writer 04-10-2022 | 5:36 PM

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பொது அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகம் அருகில் பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். 

ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  பேரணி களனி பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கிரிபத்கொட நகர் வரை பேரணியை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

பேரணியில் கலந்துகொண்ட சிலரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதாக அங்கிருக்கும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.