கோப் குழுவிற்கு சரித்த ஹேரத்தின் பெயர் பரிந்துரை

கோப் குழுவிற்கு சரித்த ஹேரத்தின் பெயர் பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2022 | 12:23 pm

Colombo (News 1st) கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினராக தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவர், பேராசிரியர் சரித்த ஹேரத்தை பரிந்துரைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய(04) பாராளுமன்ற சபை அமர்வின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கோப் குழுவிற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த கலாநிதி ஹர்ஷ டி சில்வா, உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள காரணத்தினால், அவருக்கு பதிலாக சரித்த ஹேரத்தின் பெயரை பரிந்துரைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்