இல்லங்கள் தோறும் செல்ல மீண்டும் தயாராகியுள்ள கம்மெத்த குழுவினர்

இல்லங்கள் தோறும் செல்ல மீண்டும் தயாராகியுள்ள கம்மெத்த குழுவினர்

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2022 | 7:45 pm

Colombo (News 1st) கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 6 ஆம் கட்டம் நாளை (05) ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது. 

பின்தங்கிய கிராமப்புறங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களின் தற்போதைய வாழ்க்கை நிலை தொடர்பில் ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து  கடந்த 05 கட்டங்களிலும் வீடுகள் தோறும் சென்று கம்மெத்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

COVID பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டு மக்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

மக்களின் சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளை அடையாளம் காண கம்மெத்த  மீண்டும் தயாராக உள்ளது.

நாளை முதல் இல்லங்கள் தோறும் சென்று திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

சர்வமத வழிபாடுகளுடன் கம்மெத்த  இல்லங்கள் தோறும்  திட்டத்தின்  ஆறாம் கட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுடன் கம்மெத்த குழுவினர் நாளை யாழ்ப்பாணம், மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு பயணிக்கவுள்ளனர். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்