இன்று (04) நள்ளிரவு முதல் பால் மா, கோதுமை மா விலை அதிகரிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் பால் மா, கோதுமை மா விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2022 | 5:16 pm

Colombo (News 1st) உள்நாட்டு பால் மா விலை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய,  400 கிராம் பால் மா 100 ரூபாவால் விலை அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் பால் மா 230 ரூபாவால் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஒரு கிலோகிராம் கோதுமை மா விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதான இரண்டு நிறுவனங்களும் கோதுமை மாவிற்கான விலையை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டார்.

எனினும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை என அவர் கூறினார். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்