.webp)
Colombo (News 1st) சர்வதேச குடியிருப்பு தினம் இன்றாகும்(03).
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திங்கட்கிழமையன்று சர்வதேச குடியிருப்பு தினமாக 1986ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
'பாரபட்சம் காட்டாதிருப்போம் - யாரையும் எந்த இடத்திலும் கைவிடாது காப்போம்' என்பதே இம்முறை சர்வதேச குடியிருப்பு தினத்தின் தொனிப்பொருளாகும்.
சர்வதேச குடியிருப்பு தினத்திற்கான பிரதான நிகழ்வு, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, COVID-19 நெருக்கடி மற்றும் நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் கடந்த காலங்களில் இலங்கையிலுள்ள குடியிருப்புகள் தொடர்பில் எவ்வித கணக்கீட்டையும் மேற்கொள்ள முடியாமல் போனதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.