.webp)
Colombo (News 1st) மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
காணாமற்போன மற்றுமொருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை குளத்தில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 16 வயதான சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குளத்தில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதான மற்றுமொருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.