பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

by Staff Writer 02-10-2022 | 2:49 PM

Colombo (News 1st) பிரபல நடிகரான தர்ஷன் தர்மராஜ் தனது 41ஆவது வயதில் இன்று(02) காலை காலமானார்.

மாரடைப்பு காரணமாக இன்று(02) காலை உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இறக்குவானையில் பிறந்த அன்னார், சிட்னி சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான ''A-9'' நாடகத்தினூடாக கலைத்துறைக்குள் பிரவேசித்தார்.

2008ஆம் ஆண்டு வௌியான ''பிரபாகரன்'' எனும் திரைப்படத்தினூடாக அவர் திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

2013ஆம் ஆண்டு தர்ஷன் தர்மராஜுக்கு ''இனியவன்'' திரைப்படத்திற்காக 2 விருதுகளும் கிடைத்திருந்தன.

மாத்தா, சுனாமி, கோமாளி கிங்ஸ் உள்ளிட்ட பல தமிழ், சிங்கள மொழி திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார்.

யதார்த்தமான நடிப்புத் திறமைகள் நிறைந்த நடிகராக விமர்சகர்களால் தொடர்ந்து பாராட்டப்படும் அன்னார், அனைத்து தமிழ், சிங்கள ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான கலைஞராகவும் வலம்வந்தார்.