மின்வெட்டு நேரத்தில் மாற்றம் இல்லை – இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்வெட்டு நேரத்தில் மாற்றம் இல்லை – இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்வெட்டு நேரத்தில் மாற்றம் இல்லை – இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2022 | 3:20 pm

Colombo (News 1st) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நுரைச்சோலை லக் விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி திருத்தப்பட்டு, மீண்டும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டாலும் மின் துண்டிப்பு நேரம் குறைக்கப்படாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களிலும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க கூறியுள்ளார்.

இதனிடையே, எரிபொருட்களின் தரம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் ஜனக்க ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்