கால்பந்தாட்ட போட்டியின் ​போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 174 பேர் பலி

கால்பந்தாட்ட போட்டியின் ​போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 174 பேர் பலி

கால்பந்தாட்ட போட்டியின் ​போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 174 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2022 | 3:37 pm

Colombo (News 1st) இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் நேற்றிரவு(01) நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி குறைந்தது 174 பேர் உயிரிழந்துள்ளனர்.

சன நெரிசலில் சிக்கி மேலும் 180 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Arema FC மற்றும் Persebaya Surabaya அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நிறைவடைந்ததன் பின்னர், தோல்வியடைந்த அணியின் ஆதரவாளர்கள் விளையாட்டு மைதானத்தை சூழ்ந்து கொண்டனர்.

இதனையடுத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சன நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்