2022 பிரீமியர் லீக்: மன்னாரில் கரப்பந்தாட்ட அறிமுகப் போட்டிகள்

2022 பிரீமியர் லீக்: மன்னாரில் கரப்பந்தாட்ட அறிமுகப் போட்டிகள்

2022 பிரீமியர் லீக்: மன்னாரில் கரப்பந்தாட்ட அறிமுகப் போட்டிகள்

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2022 | 6:24 pm

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் கரப்பந்தாட்ட அறிமுகப் போட்டிகள் மன்னாரில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

மன்னார் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் மன்னார் கரப்பந்தாட்ட லீக் இணைந்து இந்த கரப்பந்தாட்டப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த அறிமுகப் போட்டி நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட ரீதியில் கரப்பந்தாட்ட வீரர்களை உள்ளடக்கி 8 அணிகள் உருவாக்கப்பட்டு குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்