வல்வெட்டித்துறையில் உடல் கருகிய நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள் மீட்பு

வல்வெட்டித்துறையில் உடல் கருகிய நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2022 | 3:59 pm

Colombo (News 1st) யாழ் – வல்வெட்டித்துறையில் உடல் கருகிய நிலையில் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று அதிகாலை சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கை, நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது பெரியப்பாவின் வீட்டிலுள்ள அறையொன்றில் வசித்து வந்த 31 வயதான சரவணபவன் ரஞ்சித்குமார் மற்றும் அவரது மனைவியான 26 வயதான கிரிஷாந்தினி ரஞ்சித்குமார் ஆகியோரே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

தம்பதியினரின் அறை முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், மற்றுமொரு அறையிலும் தீ பரவியுள்ளது.

அயலவர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்திய நிலையில், அறையில் உடல் கருகிய நிலையில் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மரண விசாரணை அதிகாரியின் பரிசோதனைகளை அடுத்து, சடலங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தம்பதியினரின் கட்டிலுக்கு அடியில் பெட்ரோல் கொள்கலன் இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்