இலங்கையின் மிக நீளமான சித்திரத்தை வரையும் செயற்பாடு சிறுவர் தினத்தில் பூர்த்தி

இலங்கையின் மிக நீளமான சித்திரத்தை வரையும் செயற்பாடு சிறுவர் தினத்தில் பூர்த்தி

எழுத்தாளர் Bella Dalima

01 Oct, 2022 | 8:10 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் சிறுவர்களின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில்,  ஒரு மாத காலமாக விசேட செயற்றிட்டத்தை முன்னெடுத்த MTV Channel Private Limited இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த சிறுவர்களுடன் சிறுவர் தினத்தை கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் கொண்டாடியது. 

சிறுவர்கள் மற்றும் பெற்றோரால் விஹாரமகா தேவி பூங்கா இன்று நிறைந்து காணப்பட்டது.

சக்தி TV, சிரச TV, TV1, நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் ஸ்டைன் ஸ்டூடியோ இணைந்து சிறுவர் தின நிகழ்வுகளை நடத்தின.

கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் நிறைவேற்று குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல், சிரச பிரதம நிறைவேற்றதிகாரி சுசார தினால் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சிறுவர்களை சுதந்திரமாக செயற்படவைப்பதன் முக்கியத்துவத்தை சிரச பிரதம நிறைவேற்றதிகாரி சுசார தினால் இதன்போது தௌிவுபடுத்தினார்.
 
சிறுவர்களின் கனவு மற்றும் எதிர்ப்பார்ப்புகள் தொடர்பில் ஏனையவர்களுக்குள்ள பொறுப்பு தொடர்பில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் நிறைவேற்றுக் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் உரையாற்றினார்.​

இன்றைய நாள் முழுவதும் சிறுவர்களின் மகிழ்ச்சியால் விஹாரமகா தேவி பூங்கா நிறைந்திருந்தது.

சிறுவர் தினத்தில் சிறுவர்கள் பயனடையும் வகையில், விகாரமஹா தேவி பூங்காவில் பல்வேறு வலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.

கனவுகள் நனவாகும் இடம் – தெற்காசியாவில் மிகப்பெரிய கலயகத் தொகுதி- ஸ்டைன் ஸ்டூடி​யோ வலயம் பிள்ளைகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கியது.

சவால்களை வெற்றிகொள்வதற்கான Climbing அனுபவமும் அவர்களுக்கு கிட்டியது.

ஒலிப்பிக் விளையாட்டுகளில் ஒன்றான Climbing விளையாட்டை முதற்தடவையாக விளையாடும் வாய்ப்பு இன்று சிறுவர்களுக்கு கிடைத்ததுடன், ஆர்வத்துடன் அதில் அவர்கள் பங்கேற்றனர்.

வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வாசிப்பு முகாம், புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் சித்திர முகாம் ஆகியவற்றிலும் அதிகளவிலான சிறுவர்கள் கூடியிருந்தனர்.

எமது அனுசரணையாளர்களும் மெலிபன் வலயம் மற்றும் சிக்னல் வலயத்தை அமைத்து சிறுவர்களுக்கு புதிய அனுபவங்களை பெறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர். Safeguard வலயமும் புதிய அனுபவமாகும்.

கம்மெத்த  Tech Bus ஊடாக தொழில்நுட்ப அனுபவத்தை பெறும் அதேவேளை, குரல் தேர்வு மற்றும் திரைப்பரீட்சையில் தோற்றும் வாய்ப்பும் சிறுவர்களுக்கு கிடைத்தது.

இன்றைய நாள் முழுவதும்  சிறுவர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியது.

இன்று மாலை வேளையில் அனைவரும் எதிர்ப்பார்த்த தருணம் உதயமானது. ஒரு மாதமாக நாட்டின் மாணவர்கள் வரைந்த சித்திரம் இன்று முழுமைப்படுத்தப்பட்டது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். மாணவர்கள் வர்ணம் தீட்டிய சித்திரத்தை ஹேமந்த வரக்காபிட்டிய வரைந்திருந்தார்.

MTV Channel Private Limited ஊடக வலையமைப்பு நாடளாவிய சிறுவர்களை இணைந்துக்கொண்டு இன்று முடிவிற்குக் கொண்டுவந்த இந்த செயற்றிட்டம் ஒரு ஆரம்பம் மாத்திரமே! 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்