இலகு ரயில் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிறுத்தியமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் விசேட விசாரணை

இலகு ரயில் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிறுத்தியமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் விசேட விசாரணை

இலகு ரயில் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிறுத்தியமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் விசேட விசாரணை

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2022 | 5:12 pm

Colombo (News 1st) நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த இலகு ரயில் திட்டத்தை இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக நிறுத்தியமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளார்.

இந்த அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் W.P.விக்ரமரத்ன தெரிவித்தார்.

ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 15.7 கிலோமீட்டர் நீளமுள்ள 16 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய இலகு ரயில் திட்டம், தலைநகரில் நிலவும் நெரிசலுக்கு இலாபகரமான தீர்வு அல்ல என கூறி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அந்த திட்டம் இரத்து செய்யப்பட்டது.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்