.webp)
Colombo (News 1st) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் வி.என். மதிஅழகன் எழுதிய "வி.என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்" எனும் கருவி நூலை ஊடக பட்டப்படிப்பு மாணவர்களின் உசாத்துணை பாடநூல்களில் ஒன்றாக யாழ். பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளது.
ஊடக கற்கைகள் துறையின் இளமாணி பட்டப்படிப்பு பாடவிதானத்தில், வானொலி தயாரிப்பும் முன்வைப்பும், பொது கலைமாணி பட்டம், சிறப்பு கலைமாணி பட்டம் ஆகிய பாட அலகுகளுக்கு அமைவாக இந்த நூல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
"வி. என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்" நூலானது, இலங்கை ஒலி - ஔிபரப்பு வரலாற்றில் வெளியான முதலாவது கருவி நூல் என துறைசார் நிபுணர்களால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.