மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம்

யுகதனவி மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம்

by Bella Dalima 30-09-2022 | 3:18 PM

Colombo (News 1st) கெரவலப்பிட்டிய - யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ன.

இதற்கு தேவையான மசகு எண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தினூடாக நாளாந்தம் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள மின் பிறப்பாக்கியின் திருத்தப்பணிகள் நிறைவடையும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தும் கால அளவை அதிகரிக்காதிருப்பதற்கு கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் ஒத்துழைப்பாக அமையும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின்னுற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் மசகு எண்ணெய்யை பெற்றுக்கொடுக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின் பிறப்பாக்கியை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை தேசிய கட்டமைப்பில் அதனை இணைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.