காலநிலை மாற்றம்: இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகம்

இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்: ADB வங்கியிடம் ஜனாதிபதி முன்மொழிவு

by Bella Dalima 30-09-2022 | 4:28 PM

Colombo (News 1st) இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்  (ADB)முன்மொழிந்துள்ளார். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa-வை சந்தித்த போதே ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கடந்த காலங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கிய அவசர உதவிகளுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரிடம் ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.