IMF மாநாட்டில் கலந்துகொள்ள தீர்மானம்

IMF மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை பிரதிநிதிகள் எதிர்வரும் 10ஆம் திகதி பயணம்

by Chandrasekaram Chandravadani 28-09-2022 | 7:49 AM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ள இலங்கை பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

தாம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் காரணமாக இம்முறை மாநாடு இலங்கைக்கு மிக முக்கியம் வாய்ந்ததாக அமையும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.