காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 28-09-2022 | 10:00 AM

Colombo (News 1st) அனுராதபுரத்தின் சில பிரதேசங்களில் காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு(27) கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, அனுராதபுரம் - மொரகொட பகுதியில் நேற்று(27) மாலை காட்டு யானை தாக்கியதில் 58 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, நேற்று முன்தினம்(26) எப்பாவல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.