பாலத்துறை – கஜீமா தோட்டத்தில் பரவிய தீயால் 80 வீடுகளுக்கு சேதம்

பாலத்துறை – கஜீமா தோட்டத்தில் பரவிய தீயால் 80 வீடுகளுக்கு சேதம்

பாலத்துறை – கஜீமா தோட்டத்தில் பரவிய தீயால் 80 வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2022 | 7:23 am

Colombo (News 1st) கொழும்பு – பாலத்துறை கஜீமா தோட்டத்தில் பரவிய தீயால் 80 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் ​தெரிவித்துள்ளனர். 

நேற்றிரவு(27), 7.30 மணியளவில் குடியிருப்பில் பரவிய தீ, கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக சம்பவ இடத்தில் இன்று(28) இரசாயன பகுப்பாய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

தீக்கிரையான வீடுகளில் வசித்தவர்கள் தற்போது மோதர உயன சன சமூக நிலையம் மற்றும் விகாரையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதேச செயலாளர் நாலக்க ரத்னாயக்க குறிப்பிட்டார்.

இதனிடையே, தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்குமாறு ஜப்பானுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்