ஜப்பான் மன்னர், பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்

ஜப்பான் மன்னர், பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2022 | 7:00 pm

மன்னர், பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் 

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டோக்கியோவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜப்பான் மன்னர் Naruhito-வையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.

ஜப்பானிலிருந்து இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸிற்கு பயணிக்க திட்டமிட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஆகியோரை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடவுள்ளார்

இந்த விஜயத்தை நிறைவு செய்து, நாளை மறுதினம் (30) ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்