சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னாரில் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னாரில் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2022 | 4:46 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் 3 சிறார்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

வவுனியா மற்றும் திருகோணமலை -மொரவெவ பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்