ஆமி சுரங்க உள்ளிட்ட இருவர் கைது

ஆமி சுரங்க உள்ளிட்ட இருவர் கைது

ஆமி சுரங்க உள்ளிட்ட இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2022 | 3:43 pm

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆமி சுரங்க எனப்படும் புத்திக பிரசாத்தும் மற்றுமொரு சந்தேகநபரும் முல்லேரியா – வல்பொலயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கியொன்று சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த 2014 ஆம் ஆண்டு வெல்லம்பிட்டிய-  உமகிலிய மைதானத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பிரசார மேடையை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியமை,  2018 ஆம் ஆண்டு பேலியகொடையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தமை, 2020 ஆம் ஆண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் அடையாள அட்டையை போலியாக தயாரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஆமி சுரங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்