.webp)
Colombo (News 1st) தண்டவாள பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க நிதி இன்மையினால், கரையோர ரயில் சேவையினை மணித்தியாலத்திற்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெமட்டகொடையில் ருஹூணு குமாரி ரயில் விபத்திற்குள்ளாகியது.
கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தெமட்டகொடைக்கு ரயில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது ரயிலை சாரதியின் உதவியாளரே செலுத்தியதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்தார்.
ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, உரிய இடத்தில் அதனை நிறுத்த முடியாமல் போனமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ரயில் சாரதிகளின் தங்குமிடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.