திரிபோஷாவின் தரத்தை ஆராயும் 2 நிறுவனங்கள்

திரிபோஷாவின் தரத்தை ஆராயும் 2 நிறுவனங்கள்

திரிபோஷாவின் தரத்தை ஆராயும் 2 நிறுவனங்கள்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2022 | 8:47 am

Colombo (News 1st) திரிபோஷா தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளதாக திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகளே கிடைக்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

அந்த அறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் திரிபோஷாவின் தரம் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, உரிய குறியீட்டின் படி உற்பத்தி செய்யப்படும் திரிபோஷா, சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

திரிபோஷா உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்திலுள்ள அஃப்லடோக்சின் (Aflatoxin) வீதம் தொடர்பிலான அறிக்கையும் உள்ளடக்கப்படவுள்ளதாக தீப்தி குலரத்ன கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்