ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் இறுதி பயணம்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் இறுதி பயணம்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் இறுதி பயணம்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2022 | 12:58 pm

Colombo (News 1st) ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் (Shinzo Abe) இறுதிக் கிரியைகள் இன்று(27) இடம்பெறுகின்றன. 

ஆயிரக்கணக்கானோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதுடன், சுமார் 700 வௌிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

மறைந்த ஷின்ஸோ அபேவின் அஸ்தி, பிரதமர் Fumio Kishida விடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் உத்தியோகபூர்வமாக இராணுவ அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இறுதிச் சடங்கு நடைபெறும் மண்டபத்தில், அஸ்தி வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்குகளுக்காக அதிக நிதி செலவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள்  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜப்பானின் நரா நகரில் கடந்த ஜூலை 8ஆம் திகதி நடைபெற்ற பிரசார கூட்டமொன்றின் போது முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்