சிங்கப்பூர் பிரதமர் மற்றும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

சிங்கப்பூர் பிரதமர் மற்றும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

சிங்கப்பூர் பிரதமர் மற்றும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2022 | 9:22 am

Colombo (News 1st) ஜனாதிபதி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong இடையே டோக்கியோ நகரில் இரு தரப்பு பேச்சுவார்த்தையொன்று ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், ஜனாதிபதி மற்றும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோஷிமசா ஹயாஷி(Yoshimasa Hayashi) இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று(26) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்