ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் பதில் அமைச்சர்களிடம் கையளிப்பு

ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் பதில் அமைச்சர்களிடம் கையளிப்பு

ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் பதில் அமைச்சர்களிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2022 | 2:43 pm

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வௌிநாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தினால் குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் பதில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த அமைச்சுகளின் இராஜாங்க அமைச்சர்களே, பதில் அமைச்சர்களாக செயற்படவுள்ளனர்.

அதற்கமைய, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக ஷெஹான் சேமசிங்க, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக திலும் அமுனுகம, தொழில்நுட்ப பதில் அமைச்சராக கனக ஹேரத், பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக அனுபா பெஸ்குவல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று(26) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்