நெனோ நைட்ரஜன் உர இறக்குமதி: விசேட கணக்காய்வு அறிக்கை விவசாய அமைச்சிற்கு அனுப்பி வைப்பு

நெனோ நைட்ரஜன் உர இறக்குமதி: விசேட கணக்காய்வு அறிக்கை விவசாய அமைச்சிற்கு அனுப்பி வைப்பு

நெனோ நைட்ரஜன் உர இறக்குமதி: விசேட கணக்காய்வு அறிக்கை விவசாய அமைச்சிற்கு அனுப்பி வைப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2022 | 4:05 pm

Colombo (News 1st) இந்தியாவின் நெனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதி தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை, மேலதிக விசாரணைகளின் நிமித்தம் விவசாய அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

விடயங்களை ஆராய்ந்த பின்னர், கூடிய விரைவில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன தெரிவித்தார்.

கடந்த வருடம் இந்தியாவின் குஜராத்திலுள்ள இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து சுமார் 21 இலட்சம் லீட்டர் திரவ நெனோ நைட்ரஜன் உரத்தை விவசாய அமைச்சர் முன்பதிவு செய்திருந்தது.

அதிக விலைக்கு நெனோ நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை கருத்திற்கொண்டு கணக்காய்வாளர் நாயகத்தினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்