பேரணி மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்

சோசலிச இளைஞர் சங்கத்தின் பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

by Bella Dalima 24-09-2022 | 4:29 PM

Colombo (News 1st) அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு மருதானையில் பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு ''புதிய சக்தி - இளைஞர் சக்தி மீண்டும் கொழும்பிற்கு'' என்ற தொனிப்பொருளில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்ட பேரணி செல்வதற்கு முற்பட்ட நிலையில், அதற்கு பொலிஸாரால் தடையேற்படுத்தப்பட்டது.

இதன்போது, போராட்டக்காரர்களை கலைப்பதற்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.