முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்: அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்: அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்: அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2022 | 3:55 pm

Colombo (News 1st) கோழிப்பண்ணைகளுக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார். 

தற்போது பண்ணைகளில் உள்ள கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

கோழிப்பண்ணைகளுக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000-லிருந்து 10,000-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில், கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, கோழிப்பண்ணைகளை தொடர்ந்து நடத்திச்செல்வதற்கும் அவற்றை இறக்குமதி செய்வதை விட உள்நாட்டிலேயே பெறும் வழிமுறைகளை தக்கவைப்பதற்கும் தேவையான தீவனங்களை வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாக மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்