.webp)
Colombo (News 1st) பதுளை- எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல ரொக் வனப்பகுதியில் இன்று மதியம் தீ பரவியுள்ளது.
இதன்போது, சுமார் 7 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இருப்பினும், தீயை கட்டுப்படுத்த எல்ல பிரதேச செயலகம் இராணுவத்தினரின் உதவியை கோரியுள்ளது.
இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பதுளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஸ்பிரிங்வௌி - போகஸ்வத்த வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இருந்து காட்டுத்தீ பரவியதாகவும், இதனால் சுமார் 3 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான புல்வௌி முற்றிலும் தீக்கிரையாகியுள்ளதாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.