யாழில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

யாழில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

யாழில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2022 | 7:27 pm

Colombo (News 1st) யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் குழுவினர் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

கடந்த காலங்களில் அச்சுவேலி பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 7 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்