.webp)
Colombo (News 1st) நெல் கொள்வனவிற்காக 500 மில்லியன் ரூபாவை விவசாய நம்பிக்கை நிதியம், விவசாயம் மற்றும் கமநல காப்புறுதிச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார்.
இதன்படி, 200 மில்லியன் ரூபா விவசாய நம்பிக்கை நிதியத்தில் இருந்து பெறப்படவுள்ளது.
விவசாயம் மற்றும் கமநல காப்புறுதிச் சபையிடமிருந்து 300 மில்லியன் ரூபா பெறப்படும் எனவும் ரோஹன புஷ்பகுமார குறிப்பிட்டார்.
இந்த தொகை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடனாக வழங்கப்படவுள்ளது.