.webp)
Colombo (News 1st) சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற 12 பேர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.
அத்துடன், ஒன்றரை வயது குழந்தைகள் இருவரும் 4 வயதான மூன்று சிறுவர்களும் 6 வயது சிறுவன் ஒருவரும் இவர்களில் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்ட 12 பேரும் இன்று காலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.