கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டது

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டது

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2022 | 4:25 pm

Colombo (News 1st) கதிர்காமம் பிரதேச சபை நேற்று (22) நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மில்லினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

கதிர்காமம் பிரதேச சபையின் அதிகாரங்களை பிரயோகித்து பணிகளை மேற்கொள்ள மொனராகலை உதவி மாகாண ஆணையாளருக்கு குறித்த வர்த்தமானியூடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் பல்வேறு மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையின் போது தெரியவந்ததை அடுத்து,  கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மில் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்