.webp)
Colombo (News 1st) அரச ஊழியர்கள் தகுந்த ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கும் வகையில், எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுற்றுநிருபம் வெளியிடப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஊழியர்கள் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆடைகளை தவிர்த்து, பொருத்தமான ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் M.M.P.K.மாயாதுன்னே குறிப்பிட்டார்.
சேலை உள்ளிட்ட ஆடைகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களின் அலுவலக உடைகள் தொடர்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.