.webp)
Colombo (News 1st) அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அனுமதி கிடைத்ததாக கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.