.webp)
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77ஆவது பொதுச்சபை அமர்வை முன்னிட்டு, அமெரிக்க ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வௌிவிவகார அமைச்சு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளைய தினம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான பொதுச்சபையின் 77 ஆவது அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.