.webp)
Colombo (News 1st) பாடசாலை மாணவி மதிய உணவிற்காக தேங்காய்த் துண்டுகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் தகவல் பொய்யானது - ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை
பாடசாலை மாணவி ஒருவர் மதிய உணவிற்காக தேங்காய்த் துண்டுகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் தகவல் பொய்யானதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான சம்பவம் மினுவாங்கொடை வலயத்தில் பதிவாகவில்லையென அரசாங்க அதிகாரிகள் குறிப்பிட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அத்தகைய நிலைமையை எதிர்கொள்ளும் பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்காக பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கள் ஊடாக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.