பங்குகளை அடமானம் வைத்து நிதி திரட்டிய அதானி

சீமெந்து நிறுவன பங்குகளை அடமானம் வைத்து நிதி திரட்டிய அதானி குழுமம்

by Bella Dalima 22-09-2022 | 7:54 PM

Colombo (News 1st) இரண்டு  சீமெந்து நிறுவனங்களில் உள்ள தனது மொத்த பங்குகளையும் ஹாங்காங்கில் உள்ள வங்கியில் அடமானம் வைத்து  அதானி குழுமம் நிதி திரட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

அதானி குழுமம் 16 சர்வதேச வங்கிகளில் கடன் பெற்று  இரண்டு சீமெந்து  நிறுவனங்களையும் அண்மையில் கைப்பற்றியது. 

தற்போது இரு நிறுவனங்களிலும்  அதானி நிறுவனத்திற்கு 96,800 கோடி ரூபா பெறுமதியான பங்குகள் உள்ளன. 

அதிரடியாக கடன் பெற்று,  புதிய வர்த்தகங்களில் தடம்பதித்து வரும் அதானி குழுமம், புதிதாக கைப்பற்றிய இரண்டு நிறுவனங்களையும் அடமானம் வைத்து  ஹாங்காங் வங்கி ஒன்றில் நிதி திரட்டியுள்ளதாக தகவல்  வௌியாகியுள்ளது. 

பங்குச்சந்தையில் அதானி குழுமம் வழங்கியுள்ள தகவல் மூலம் இது தௌிவாகியுள்ளது. 

உலக செல்வந்தர்கள்  வரிசையில் முதலிடத்தை நோக்கி  அதானி பயணித்து வருகின்ற நிலையில், அதானி  நிறுவனத்தின் கடன்சுமை பாரியளவில் அதிகரித்துள்ளதாக CreditSights நிறுவனம் அண்மையில்  எச்சரித்திருந்தது. 

இந்திய  மூலதன சந்தையில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாரிய கடன் இதுவென இந்திய பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.