.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார்.
இன்று (22) முற்பகல் புத்தகக் கண்காட்சி வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி, இலங்கை புத்தக வௌியீட்டு சங்கத்தின் தலைவர் சமந்த இந்திவர உள்ளிட்டவர்களால் வரவேற்கப்பட்டார்.
இம்முறை புத்தகக் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வௌிநாடுகளை சேர்ந்த புத்தக விநியோகஸ்தர்களின் 400-க்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
கூடாரங்களைக் கண்காணித்த ஜனாதிபதி, நூலாசிரியர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார்.
இதனிடையே, புத்தகக் கண்காட்சியை பார்வையிடச் சென்றிருந்த மக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.