டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகளுக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கு

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகளுக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கு

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகளுக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கு

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2022 | 7:04 am

Colombo (News 1st) அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களது குடும்ப நிறுவனமான ‘ட்ரம்ப் அமைப்பு’ மீதான விசாரணைகளுக்கு பின்னரே அவர்கள் மீது குற்றஞ்சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடன் பெறுவதற்கும் குறைந்த வரி வருமானத்தை செலுத்துவதற்கும் தமது வியாபாரத்தின் மதிப்பு குறித்து பொய்யுரைத்தாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

2011 முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ட்ரம்ப் அமைப்பு, ஏராளமான மோசடி செயல்களை செய்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை ட்ரம்ப் முழுமையாக நிராகரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பிள்ளைகளான டொனால்ட் ஜூனியர், இவன்கா மற்றும் எரிக் ட்ரம்ப் மற்றும் ட்ரம்ப் அமைப்பின் 2 நிர்வாகிகளான ஆலன் வெய்சல்பெர்க், ஜெஃப்ரி மெக்கனி ஆகியோரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்