அத்தனகல்லையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை

அத்தனகல்லையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை

அத்தனகல்லையில் இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2022 | 3:37 pm

Colombo (News 1st) அத்தனகல்லை – ஹெலபனாகந்த பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலுக்கு சென்ற பெண், நேற்று (21) மாலை வீடு திரும்பிய போது தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற நபர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த 37 வயதான பெண், வத்துப்பிட்டிவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெற்றன.

இந்த கொலை தொடர்பில் 45 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்