வைரஸை காட்டிக்கொடுக்கும் நவீன முகக்கவசம்

காற்றில் வைரஸ் கலந்திருந்தால் குறுஞ்செய்தி மூலம் காட்டிக்கொடுக்கும் நவீன முகக்கவசம் கண்டுபிடிப்பு

by Bella Dalima 21-09-2022 | 3:57 PM

Colombo (News 1st) காற்றில் வைரஸ் கலந்திருந்தால், அதை குறுஞ்செய்தி மூலம் அணிந்திருப்பவருக்குக் காட்டிக் கொடுக்கும் வகையில், நவீன முகக்கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன முகக்கவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும்போது, அவரைச் சுற்றி காற்றில் இருக்கும் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, முகக்கவசம் அணிந்திருப்பவரை எச்சரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த முகக்கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களிலும், அதாவது Lift அல்லது மூடிய அறைகள் போன்றவற்றிலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களிலும் திறனுடன் செயற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.