ஆகஸ்ட் மாதத்தில் உணவிற்கான பணவீக்கம் 84.6% உயர்வு

ஆகஸ்ட் மாதத்தில் உணவிற்கான பணவீக்கம் 84.6% உயர்வு

by Staff Writer 21-09-2022 | 6:55 PM

Colombo (News 1st) இலங்கையின் ஆகஸ்ட் மாத பணவீக்கம் 70.2 வீதமாக அமைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் புதிய தரவுகளை வெளியிடும் வகையில், திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணுக்கு அமைய, கடந்த ஜூலை மாத பணவீக்கம் 66.7% ஆக அமைந்திருந்தது.

உணவு , உணவு அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றம் ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்கம் 70.2 வீதமாக அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் 82.5% ஆக இருந்த உணவிற்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 84.6% ஆக அமைந்துள்ளது.