சிகிச்சைக்காக வௌிநாடு சென்ற சமந்தா

சிகிச்சைக்காக வௌிநாடு சென்ற சமந்தா

சிகிச்சைக்காக வௌிநாடு சென்ற சமந்தா

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2022 | 4:17 pm

சமந்தா நடிப்பில் 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
 
இதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். 

இந்தியிலும் சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் வருகின்றன. இந்நிலையில், நடிகை சமந்தா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

கடந்த சில வருடங்களுக்கு முன் சமந்தாவிற்கு தோல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் 'அஞ்சான்' படப்பிடிப்பின்போதும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார். 

தற்போது அந்த பிரச்சினை மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சமந்தா வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், சமந்தா தரப்பிலிருந்து இவ்விடயம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்