மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை சந்தித்தார் ஜனாதிபதி

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை சந்தித்தார் ஜனாதிபதி

by Bella Dalima 20-09-2022 | 6:52 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாம் சார்ள்ஸ்  மன்னரை  சந்தித்துள்ளார்.

இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றபோது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இறுதி நிகழ்வில் பங்குபற்றிய உலகத் தலைவர்களுக்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 18  ஆம் திகதி பக்கிங்ஹாம் மாளிகையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.