.webp)
Colombo (News 1st) மின் கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தி சர்வ மதத் தலைவர்கள் கொழும்பில் இன்று ஒன்றுகூடி பேரணி ஒன்றை நடத்தினர்.
கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பமான சமயத் தலைவர்களின் பேரணியில் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
''கட்டணம் செலுத்த முடியாது, செலுத்தமாட்டோம் - அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு' என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பேரணியாக செல்வதற்கு தயாரான போது அதற்கு அனுமதி வழங்க முடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அனைத்து சமயத் தலைவர்கள் தலைமையிலான குழுவினர் கோட்டை விகாரைக்கு சென்றனர்.