குளோனிங் மூலம் உலகின் முதல் ஓநாயை உருவாக்கி சாதனை

குளோனிங் மூலம் உலகின் முதல் ஓநாயை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

by Bella Dalima 20-09-2022 | 5:18 PM

Colombo (News 1st) குளோனிங் (Cloning) மூலம் உலகின் முதல் ஓநாயை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தை சேர்ந்த சினோஜிங் பயோடெக்னாலஜி நிறுவனம் குளோனிங் முறையில் உலகின் முதல் ஆர்ட்டிக் ஓநாயை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

பெண் ஓநாயின் அணுக்கருக்கள் மற்றும் ஆர்ட்டிக் பிரதேசத்தில் வாழும் பெண் ஓநாயின் சோமாடிக் செல்களை இணைத்து அவற்றிலிருந்து புதிய கருக்களை உருவாக்கி வாடகைத் தாய் முறையில் இந்த ஓநாய் உருவாக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் 10 ஆம் திகதி பிறந்த இந்த ஓநாய் 100 நாட்களைக் கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உலகின் முதல் குளோனிங் ஓநாயான இதற்கு  ‘மாயா’ என பெயரிடப்பட்டுள்ளது.

குளோனிங் என்பது கலவியில்லா இனப்பெருக்க முறையாகும். இதுவரை பல்வேறு உயிரினங்களை விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.