.webp)
Colombo (News 1st) தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு குழுவொன்று இன்று(19) நியமிக்கப்பட்டது.
பொதுக் கட்டமைப்பு குழுவை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இன்று(19) நடைபெற்றது.
யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.